Ad Widget

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்றவரும், வாங்கிய மாணவனும் கைது!

கொக்குவில் பகுதியில் கஞ்சா மற்றும் பாவுல் ஆகிய போதைப்பொருட்களை மாணவன் ஒருவருக்கு விற்பனை செய்தவரையும் அவற்றை வாங்கி வைத்திருந்த மாணவனையும் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.கே. தெரிவித்தார்.

நேற்றைய தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இவர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவன் ஒருவருக்கு வெளியிலிருந்து ஒருவர் போதைப்பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக நேற்று மாலை எனக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் தனபால அடங்கிய குழுவினர் அவர்களைப் பிடிக்க களமிறங்கினர்.மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் தொழிநுட்பக் கல்லூரி மாணவன் ஒருவரை போதைப் பொருட்களுடன் கைது செய்தனர்.

அம்மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிற்கு போதைப்பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார் எனவும் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற சமூகவிரோத செயல்களையும் போதைப்பொருள் பாவனையையும் கட்டுப்படுத்துவதற்கும் இளைஞர்களை குறித்த குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் பொதுமக்களது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts