Ad Widget

கைதிலிருந்து தப்பவே கருணா, கூட்டணியுடன் சேர முயற்சிக்கின்றார் – தி.முகுந்தன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவும் (வி.முரளிதரன்) கைது செய்யப்படாலாம் என்ற நிலை உருவாகியுள்ளமையடுத்து, கருணா தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கப் பார்க்கின்றார் என தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அதிருப்தி காரணமாக விலகிய தி.முகுந்தன் (தங்கமுகுந்தன்) தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கருணா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து அவரிடம் தொடர்புகொண்டு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்ட பலரைக்கொலை செய்த குற்றவாளியாக இருப்பவர்கள் எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய முடியும்? கருணாவை கட்சியில் இணைப்பது தொடர்பில் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தனித்து முடிவை எடுக்க முடியாது. கட்சியின் செயற்குழு, மத்திய குழு ஆகியவற்றுடன் கதைத்து முடிவெடுக்க வேண்டும். சங்கரிக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை’ என்றார்.

‘எந்த இயக்கமும் உண்மையானவர்கள் இல்லை. இராணுவத்துக்கு எதிராக போராடுகின்றோம் எனத் தொடங்கி மக்களை வதைத்தனர். தங்கள் இயக்கங்களை பெரிதாகக் காட்டிக்கொள்ளும் நடவடிக்கையிலேயே அனைவரும் ஈடுபட்டனர். அதற்காக பலரைக் கொன்றும் உள்ளனர்’ என்றார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்து வரும் ஆனந்தசங்கரி, அந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலிலும் போட்டியிடுகின்றார். கொள்கையொன்று இல்லாமல் செயற்படுகின்றார். கொழும்பில் பெரும்பான்மையினத்தவருடன் சேர்ந்து தேர்தலில் ஆனந்தசங்கரி போட்டியிட்டமை பெரும் தவறு. அது தொடர்பில் சங்கரியை கேள்வி கேட்க யாரும் இல்லாதுள்ளனர்’ என்றார்.

Related Posts