Ad Widget

சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் சாட்சியமளிக்கவுள்ளார்!

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் சாட்சியளிக்கவுள்ளார்.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ கோன்பரன்ஸிங் (video conferencing) மூலம் அவர் குறித்த சாட்சியத்தை அளிக்கவுள்ளார்.

1987ம் ஆண்டு இந்தியாவின் சென்னை – சூளைமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் மற்றைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுவிப்பு அல்லாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும் அந்தக் காலப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டக்ளசும் சென்றிருந்தார். எனினும் அவர் அப்போது கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் சாட்சியளிக்கவுள்ளார்.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ கோன்பரன்ஸிங் (video conferencing) மூலம் அவர் குறித்த சாட்சியத்தை அளிக்கவுள்ளார்.

1987ம் ஆண்டு இந்தியாவின் சென்னை – சூளைமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் மற்றைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுவிப்பு அல்லாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும் அந்தக் காலப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டக்ளசும் சென்றிருந்தார். எனினும் அவர் அப்போது கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts