யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

புங்குடுதீவுப் பகுதியில் பனை வெட்டச் சென்ற முதியவர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;

உயிரிழந்த முதியவர் பனை வெட்டுவதற்காகப் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவரைக் கருங்குளவிகள் தீவிரமாகக் கொட்டியுள்ளன.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரது மகனால் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

இவ்வுயிரிழப்பு தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Posts