Ad Widget

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் ; தமிழ்செல்வனின் மனைவி சாட்சியம்

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sasirekha-Thamilselvan

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என அவர் சாட்சிமளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் செய்தியாளரை் பிரான்சிஸ் ஹரிசன் இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் என்ன நடந்தது என தெரியாது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் நடேசன் அவரது மனைவி மற்றும் புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போதும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருவதால், இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts