Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம்

இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேர் உயிரிழந்தனர்.

அதில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவு தினமே இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts