Ad Widget

ரவிராஜ் கொலை வழக்கு: 5 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர் என சந்தேகநபர்கள் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீலால் தன்தெனிய தெரிவித்தார்.

ரவிராஜ் கொலை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட கடற்படையினர் 6 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஒரு சந்தேகநபரை அரசதரப்பு சாட்சியாக நியமிப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்படி, ஏனைய 5 சந்தேக நபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 03 திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Related Posts