Ad Widget

தமிழகத்தில் கரை ஒதுங்கிய படகில் சென்றவர்கள் இலங்கை அகதிகளா?

இராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த பைபர்கிளாஸ் படகு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன் கரை ஒதுங்கியது.

இந்த படகில் ஆட்கள் யாரும் வந்தார்களா என்பது குறித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழக மரைன் பொலிஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு, நேற்று இராமேஸ்வரம் சென்றார். சங்குமால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை படகை பார்வையிட்டார், என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கரை ஒதுங்கிய இலங்கை படகில் அகதிகள் வந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்குப் பின் கடலோர பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

இராமேஸ்வரத்தில் உயரமான கண்காணிப்பு கோபுரம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த, புதிதாக தயாரிக்கப்பட்ட, நவீனரக சிறிய ரோந்துக் கப்பல் வரவுள்ளது,’’ என்றார்.

Related Posts