- Friday
- November 21st, 2025
யாழ்.கல்லுண்டாய் வெளியில் 3 மாத காலத்துக்கு கழிவுகள் எவையும் கொட்டப்படக்கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் நேற்றைய தினம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்.கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கழிவுகள்கொட்டப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...
தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச்...
ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமானார். நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வடமராட்சி -பருத்தித்துறை - கற்கோவளத்தைச் சேர்ந்த எஸ்.மணிமாறன் (வயது -32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமானவராவார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர் கடமை முடிந்து...
வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர். சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா...
மஹிந்த அரசால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட...
"எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுடன் நல்ல நட்பாக உள்ளன என்பதுடன் எம்முடன் இணைந்தும் செயற்படுகின்றன. எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம். இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்கவேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த...
சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும்...
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்புக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மென்பான நிறுவனம் ஒன்றின் விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டிருந்தது. தமது நிறுவனத்தின் விளம்பரப் பதாகையானது பொருத்தப்பட்டது விசமிகளின் செயல் எனவும் அதற்கு மனவருந்துவதாகவும் குறித்த மென்பான நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...
2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.
வடக்கு மாகாணத்தில் மக்களது வறுமை நிலையைப் போக்குவதற்கு மேலும் உரிய திட்டங்கள் அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த கால...
வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் கூட்டுறவுதின விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போதே, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர்...
போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படை அதிகாரிகளுக்கும் உறுதியளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக...
2016ம் ஆண்டு எமது மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்படும் அதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உடனான சந்திப்பு ஒன்று, யாழ் மாட்டீன் வீதியில்...
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். குறித்த மாநாட்டில் பல்வேறு அரச தலைவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜப்பான் ஊடகச் செய்திகள்...
இரண்டு இளைஞர்கள் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படித்தியிருந்தது. இந்தக் காணொளியோடு சம்பந்தப்பட்ட யுவதி மற்றும் அந்த இளைுர்கள் இருவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2014ம் நவம்பர் மாதம் 15ம் திகதி பகல் 1 மணியளவில் இடம்பெற்ற...
சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிகரட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகரட் ஒன்றின் விலை 33 ரூபாக அதிகரித்துள்ளது. 5% க்கு குறைவான அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவும் 5% க்கு மேல் அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 60 ரூபாவும்...
Loading posts...
All posts loaded
No more posts
