- Friday
- November 21st, 2025
போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்தார். யாழ். புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில்...
கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி சேயா பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று யாழ். மத்திய பேரூந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது. இன்று எமது நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக,...
இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார் இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட. வளலாய் பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.முதலில் முழுமையான...
போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள்...
சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்...
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் நிலையம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் வியாழக்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடம் அமைப்பதற்கு சிறுவர் மற்றும் விவகார அமைச்சு 5 மில்லியன் ரூபாய் நிதியை...
வடக்கு மாகாணத்தில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களை அம் மக்களுக்கே வழங்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். கொழும்பில் வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம்...
மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனையால், இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் மரணிப்பதாகவும் இவ்விரு தீய செயல்களிலும் ஈடுபடுவதற்கு நாளொன்றுக்கு 80 சிறுவர்கள், புதிதாக முயற்சிக்கின்றனர் என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுபாவனையால் நாளொன்றுக்கு 40 பேரும் புகைத்தல் பாவையால் 60 பேரும் மரணத்தை தழுவி கொள்கின்றனர் என்றும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க...
யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி...
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகபுலம் காணி விடுவிப்பு குறித்த கூட்டம் வசாவிளான் மாதா கோவில் நடைபெற்றது. அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்த காணியை மீண்டும் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்...
நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச்...
இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது. சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கு மாகாண சபை...
யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது....
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் 15 உறுப்பினர்களும் வடமாகாண செயலணிக்குழுவில் வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர், மாகாணசபை...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...
விஜய் நடித்து நேற்று வியாழக்கிழமை (01) வெளியிடப்பட்ட புலி படத்தை மொக்கைப்படம் எனக்கூறியரை, விஜயின் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெற்றுள்ளது. தாவடியிலிருந்து வருகை தந்த இளைஞர் குழு, நேற்று (01) படத்தைப் பார்வையிட்ட பின்னர், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் 'புலி படம்...
19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். எனினும்...
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர்...
சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மது, சிகரட் பாவனையால் நோய்களுக்கு இலக்காகுபவர்களின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் பல இலட்சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க...
மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன....
Loading posts...
All posts loaded
No more posts
