ஒரு வித காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கானை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் தர்சினி (வயது 36) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

10 நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11), மீண்டும் காய்ச்சல் காரணமாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts