Ad Widget

யாழ். ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமனம்

யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

justin

இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தனது குருத்துவ வாழ்வில் 25 வருடங்களை இளவாலைக் கிராமத்தின் எழுச்சிக்காகச் செலவிட்ட அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகள் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் உப அதிபராகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றி அந்தப் பாடசாலையின் அபரிதமான வளர்ச்சிக்குப் பெரும் தூணாக விளங்கியவர்.

பின்னர் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிப் பின்னர் யாழ். மறைமாவட்டத்தின் குரு முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.

1948 மே 13 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் பிறந்த அவர் 1974 ஏப்ரல் 24 திகதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது கலாநிதிப் பட்டத்தை லண்டன் சவுத்தாம்ரன் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்த அவர் யாழ். பல்கலைக்கழகத்தின் பேரவையிலும் அங்கம் வகித்தவர்.

Related Posts