Ad Widget

ஈ.பி.டி.பி அபகரித்துள்ள வீட்டை மீட்பதில் பெரும் இழுபறி நிலை

ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறி சேனாவுக்கு விண்ணப்பித்தும் இன்றுவரை வீடு கிடைக்காதமையினால் பெரும் மன விரக்தியில் உள்ளதாக மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மானிப்பாய் பகுதியில் உள்ள எனது வீட்டை ஈ.பி.டி.பியினர் அபகரித்து வைத்துள்ளனர். இதனை மீட்டுத் தருமாறு நீண்டகாலமாக பலரிடமும் விண்ணப்பித்தேன். எவ்வித முன் னேற்றமும் இல்லாத காரணத்தினால் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் எனது வீட்டை மீட்டுத்தருமாறு விண்ணப்பித்தேன்.

அவ்வாறு விண்ணப்பித்த கடிதத்துக்கு உடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டு அந்தப்பிரதி எனக்கும் அனுப்பப்பட்டது.

இதனால் எனது வீடு கிடைக்கும். அதனை என் மகளுக்குச் சீதனம் வழங்கித் திருமணம் செய்து வைக்கலாம் எனக்காத்திருந்தேன். இருப்பினும் ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமையால் நானும் மகளும் பெரும் மன விரக்தியில் உள்ளோம் என்றார்.

Related Posts