Ad Widget

பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்களே இடர்படுகின்றனர்

பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்கள் அதிகளவான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களே அதிகளவான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் உள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

வடமாகாண தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘சிறுவர் தொழிலாளர்கள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற நடைபவனி மற்றும் மானிப்பாய் வீதியிலுள்ள பிள்ளையார் மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவற்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்குக் கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களில் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களிடமிருந்தே அதிகம் கிடைக்கப்பெறுகின்றன. அதிலும் யாழ்.நகர்ப் பகுதியில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. நகர்ப்பகுதியில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள வருபவர்களிடமிருந்து இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

சிறுவர் தொழிலாளர்கள் ஆகின்ற போது, ஆபத்தான தொழில்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். சிறுவர்களுக்கு தேவையான உரிமைகள் இதன்போது மறுக்கப்படுகின்றன என்றார்.

Related Posts