- Wednesday
- May 13th, 2026
மக்களின் தேவைகள், அபிலாசைகளைப் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துகின்றது எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுயநலம் கொண்ட சுமந்திரனும் அவரின் அடியாட்களும் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகள் கொண்ட அமைப்பல்ல. அது பதிவு செய்யப்பட்ட...
யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்ததில் அதனை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர். யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலையே இச் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த திருமணத்திற்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் என்பவற்றை மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம்...
இலங்கையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்படவேண்டும். இந்தியா அதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைத்துவம் உருவாகும். என்னால் சமாளிக்க முடியாத புதியதொரு போக்கு வடகிழக்கில் ஏற்பட்டுவிடும் என்று நான் பயப் படுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி நேற்று (திங்கட்கிழமை) எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்றது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள்...
யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “கடந்த அரசாங்கம் வவுனியாவின்...
தமிழ் மக்களுக்கு பணியாற்ற தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு, லங்கா சமசமாஜ கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு...
வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...
உடுவில் பகுதியில் வாள்களுடன் பயணித்தார்கள் என்ற குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மோட்டார்...
பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்துறை-...
நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர்...
நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல்,...
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியர் சடலங்களாக மீட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய வீடமைப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (8) மாலை இளம் தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டனர். வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தம்பதியரான 25...
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு ஒரு தொகை நூல்களைக் கையளித்தல், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக்காக அவர்கள் வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்த பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தினால் தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்...
அரசியலமைப்பில் இலங்கையானது ஜனநாயக சோசலிச குடியரசு என்றே எழுதப்பட்டுள்ள போதிலும் ஜனநாயக குடியரசு என்றோ அல்லது சோசலிச குடியரசு என்றோ யாராலும் சான்றிதழ் வழங்க முடியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதனைக் கருதும்போது புதிய அரசமைப்பில் எங்களுக்குப் பெயர்ப்பலகைகள் தேவையில்லை. மாறாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இருக்கும்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த வடக்கு...
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் மற்றும் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்படடார். கோப்பாய், கல்வியங்காடு – ஆடிய பாதம் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து 4 வீடுகளுக்குள்...
அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும்...
மன்னாரில் தொடர்ந்து 66ஆவது நாளாக மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து வெட்டு தழுப்புகளுடனான மண்டை ஓடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைக்குழி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சமானது இச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன. குறித்த மண்டையோட்டில் காணப்படும் வெட்டு தழும்பானது பிரோத பரிசோதனையின் போது...
Loading posts...
All posts loaded
No more posts
