Ad Widget

புதிய அரசமைப்பு உருவாக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – மோடியிடம் சம்­பந்­தன் நேரில் வலியுறுத்தல்!!

இலங்­கை­யில் புதிய அர­ச­மைப்பு விரை­வில் உரு­வாக்­கப்­படவேண்­டும். இந்­தியா அதற்கு அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கிக்கவேண்­டும். இந்த முயற்சி தோல்­வி­யில் முடி­வ­டைந்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்­கைக் கொண்ட தலை­மைத்­து­வம் உரு­வா­கும். என்­னால் சமா­ளிக்க முடி­யாத புதி­ய­தொரு போக்கு வட­கி­ழக்­கில் ஏற்­பட்­டு­வி­டும் என்று நான் பயப் படு­கின்­றேன்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி­யி­டம் நேரில் எடுத்­து­ரைத்­துள்­ளார்.

சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய தலை­மை­யி­லான அனைத்­துக் கட்சி நாடா­ளு­மன்­றக் குழு இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடியை இந்­தக் குழு­வி­னர் நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.

இந்­தக் குழு­வில் பங்­கேற்­றுள்ள எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தமிழ் மக்­க­ளின் பிரச்­சினை தொடர்­பில், இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ருக்கு எடுத்­து­ரைத்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யில் நடை­மு­றை­யில் உள்ள அர­ச­மைப்­பில், இலங்­கைக் குடி­மக்­கள் என்­பதை நாங்­கள் உணர்­வ­தற்­கான வாய்ப்­பில்லை. இத­னா­லேயே புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. இந்த முயற்­சிக்கு இந்­தியா தனது ஆத­ர­வை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் வழங்­க­வேண்­டும். அதே நேரம் அது விரைந்து உரு­வாக்­கப்­பட அழுத்­தங்­க­ளை­யும் பிர­யோ­கிக்க வேண்­டும்.

இந்த முயற்சி தோல்­வி­யில் முடிந்­தால், வட­கி­ழக்குப் பிரச்­சினை ஏற்­ப­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்­கைக் கொண்ட தமிழ்த் தலை­மைத்­து­வம் உரு­வா­கும். நான் வயது முதிர்ந்த நிலை­யில் இருக்­கின்­றேன்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் இருந்து கொண்டே உங்­க­ளி­டம் இந்­தக் கோரிக்­கையை நான் முன்­வைக்­கின்­றேன். இந்­தக் கோரிக்­கையை நீங்­கள் உதா­சீ­னம் செய்­தால், என்­னால் சமா­ளிக்க முடி­யாத புதி­ய­தொரு போக்கு வட­கி­ழக்­கில் ஏற்­ப­டும் – என்­றார்.

Related Posts