- Wednesday
- May 13th, 2026
பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர...
காங்கேசன்துறை பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் குறித்த எழும்புக்கூடு இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக் கூடு ஆணினுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதியேனும் நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாட்டிலேயே மும்முரமாக ஈடுபட்டு...
வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும், கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் எனவும் கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. கட்சி...
யாழில் நடைபெற்று வரும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாத நுழைவு சீட்டுக்களை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.முத்திரை சந்திக்கு அருகிலுள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது குறித்த களியாட்ட...
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வைத்தியாலைக்கு சொந்தமான காணியிலிருந்தே குறித்த சீருடைகள் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள்...
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தியே வைத்தியர்கள் சார்பில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிக வெப்ப...
வடமாகாணசபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு அக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது. வடமாகாணசபையின் 131வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணசபையின்...
வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, "வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம்...
கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து...
இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG) ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு...
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட.மாகாண சபையின் 131 வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால்...
யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார். உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்...
படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில்...
இளைய தலைமுறையினரின் தலைமைப் பண்பை விருத்திசெய்யும் முகமாக மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினதும், கோப்பாயில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும் பங்களிப்பு இருக்க வேண்டுமென முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தத் துயிலுமில்லங்களுக்கான செயற்பாட்டுக் குழுவை அமைக்கும்போது தமது வேண்டுகோளை கருத்திற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த பாலிப்போடி சின்னத்துரை (யோகா), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக, மனித உரிமை மீறல் தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியமென ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒன்பது நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்...
மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் இன்று (11) மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,...
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையினைத் தடுக்கும் பொருட்டும், சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும்...
வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...
இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
