நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை!!

நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மாட்­டி­றைச்­சிக் கடை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்று நல்­லூர் பிர­தேச சபை­யின் இன்­றைய அமர்­வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் பசு வதை­யி­னைத் தடுக்­கும் பொருட்­டும், சைவ சமய விழு­மி­யங்­க­ளைப் பேணும் முக­மா­வும் சபைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் மாட்­டி­றைச்­சிக் கடை­கள் தடை­செய்­யப்­பட வேண்­டும்.

அத்­து­டன் சபை­யி­னால் குத்­த­கைக்கு விடப்­ப­டும் மாட்­டி­றைச்­சிக் கடை­கள் இனி குத்­த­கைக்கு விடப்­ப­டாது தடுக்­கப்­பட வேண்­டும் என்ற வகை­யி­லான தீர்மான வரைபை உறுப்­பி­னர் கு.மது­சு­தன் இன்று அமர்வில் முன்வைத்தார்.

அதற்கமைவாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts