மாநகர சபையின் அனுமதி பெறப்படாத நுழைவு சீட்டுக்கள் பறிமுதல்!

யாழில் நடைபெற்று வரும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாத நுழைவு சீட்டுக்களை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.முத்திரை சந்திக்கு அருகிலுள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்போது குறித்த களியாட்ட நிகழ்வுக்கு விற்கப்படும் நுழைவு சீட்டில் யாழ்.மாநகர சபை உத்தியோக முத்திரை பொறிக்கப்படவில்லை.

அது தொடர்பில் தமிழ் தேசிய, மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான கிருபாகரன் மற்றும் ரஜீவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள், நுழைவு சீட்டுக்களில் மாநகர சபை முத்திரை பொறிக்கப்படாத நுழைவு சீட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட நுழைவு சீட்டுக்களை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்.மாநகர சபை வருமான வரி பகுதியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Posts