- Wednesday
- May 13th, 2026
வைத்தியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தென் உள்ளிட்ட பிற மாகாணங்களின் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு அஞ்சுவதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடிய...
முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் பொலிஸாரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்துக்கென சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நாட்டை ஆளப்போகும் எதிர்கால சந்ததிகள் இம்மாணவர்களே. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என நிகழ்வில்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனினால் தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்வதை தடுக்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. புவநெக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன...
யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் தப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நகைக் கடை நடாத்தும் ஓர் உரிமையாளர்...
வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது , வவுனியாவிலுள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல் பொருள் ஒன்றினை வழங்கி அதனை விற்று தருமாறும் பின்னர் வந்து...
மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவை...
யாழ்.குப்பிளான் வடக்கில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, பாடபுத்தகங்கள், உள்ளிட்ட பல்கலை கழக மாணவியின் உடமைகளை தீக்கிரையாக்கி , வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. குப்பிளான் வடக்கில் நேற்று(புதன் கிழமை மாலை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுளதுடன்,...
கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில்...
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல்,...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு...
இறுதி யுத்தம் எங்கே நடைபெற்றதோ அங்கேயே நினைவுத் தூபி அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும்...
தெளிவான நோக்கம் இன்றி கூட்டு எதிரணியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். பணம் மற்றும் போதைப் பொருட்களை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த போராட்டத்தில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் பேரணியில், மது போதையில் இருந்த...
முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்து கிடந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று (புதன்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். வவுனியா பறநாட்டாங்கல்லை சேர்ந்த இராசேந்திரன்...
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருஷாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன்போது நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. செம்மணி படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற...
யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்....
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பளத்தை அதிகரிக்கக் கோரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் மற்றும் தென் மாங்கங்களில் பல பிரதேசங்களிலும்...
வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக...
Loading posts...
All posts loaded
No more posts
