Ad Widget

தென்மாகாண வைத்தியர்கள் மன்னாரில் பணியாற்ற அச்சம்: சுகாதார அமைச்சர்

வைத்தியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தென் உள்ளிட்ட பிற மாகாணங்களின் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு அஞ்சுவதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடிய மாகாண சுகாதார அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காரணம் எதுவாக இருப்பினும் கடமையிலுள்ள வைத்தியர் அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்துவது என்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நோயாளர்களை பார்வையிட வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. எனவே, பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பையும், அதிகளவான பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பது வைத்தியசாலையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

Related Posts