சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு – சிறுமியின் நண்பியிடம் சாட்சியப்பதிவு!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால்...

இன்னும் எத்தனை பெண்கள்? இனிமேல் வேண்டாம்…! யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

‘இன்னும் எத்தனை பெண்கள்? இனிமேல் வேண்டாம்…!’ என பதாதைகளை ஏந்தியவாறு யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்...
Ad Widget

நல்லூரில் கைக்குழந்தைகளுடன் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள்! – அதிகாரிகள் அசமந்தம்

நல்லூர் உற்சவ காலத்தின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் பெறுகின்றார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள். இது தொடர்பில்...

மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சுரேஸ் அதிருப்தி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை துண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளையே மகாவலி அதிகார சபை முன்னெடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நல்லாட்சியில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில்...

இனி பரத நாட்டியத்தை தெருவில் ஆட முடியாது: க.சர்வேஸ்வரன்

இனிவரும் காலங்களில் பரத நாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது. அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் ‘தெய்வீக சுகானுபவம்’...

இ.போ.ச. பேருந்துச் சேவை­கள் வடக்­கி­லும் முடங்கும்!!

சம்­ப­ளப் பிரச்­சினை உள்­ப­டப் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து இ.போ.ச. ஊழி­யர்­கள் மேற்­கொண்­டு­வ­ரும் பணிப்­பு­றக்­க­ணிப்பு போராட்­டத்­துக்கு வடக்­குப் பேருந்து சங்­கங்­க­ளும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. அதை­ய­டுத்து வடக்­கில் இன்று இ.போ.ச. பேருந்­துச் சேவை­கள் முடங்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சம்­ப­ளப் பிரச்­சினை உள்­ப­டப் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து தெற்­கில் இ.போ.ச. ஊழி­யர்­கள் நேற்­று­முன்­தி­னம் பணிப்­பு­றக்­க­ணிப்பை ஆரம்­பித்­தி­ருந்­த­னர். எனி­னும் நேற்று வடக்கு...

வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை கூட்டங்கள் நடைபெற்றன. சந்தித்து...

LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த...

விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே கூட்டமைப்பின் தவறு – சுமந்திரன்

வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார்....

விக்கியை சந்திப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என்கின்றார் சம்பந்தன்!

வடக்கு முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர்வரும் 7 ஆம் திகதி நாங்கள் இருவரும் சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் மூலமே தான் அறிவதாகவும் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்...

அபிவிருத்தியை கூட்டமைப்பினரே எதிர்த்தனர் – முதல்வர் விக்கி குற்றச்சாட்டு!

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், அனுப்பிவைத்திருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்ததாவது, “அரசாங்கம் தருவதை...

தமிழீழ வரைபட ஆலய அலங்காரம்! : TID இன் கோரிக்கையை நிராகரித்த யாழ் பதில் நீதிவான்!

விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி ஈழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். இருப்பினும் குறித்த கோரிக்கை சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டமையால் அதனை நிராகரித்த பதில் நீதிவான் வழக்கை நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். கடந்த ஜூன்...

மீள்குடியேற்றம் ஸ்தம்பித்துள்ளமை தொடர்பில் மாவை கவலை!

மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது. இதன்போதே மேற்படி...

கிளிநொச்சியில் காவற்துறையின் இலஞ்ச ஊழலை எதிர்த்து மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்!!

கிளிநொச்சியில் முதியவர் ஒருவர் காவற்துறையினர் இலஞ்சம் பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில், இன்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30ற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மேடை...

ரூபா 450 மில்லியனில் கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நட்டார் பிரதம நீதியரசர்

கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதி 450 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று (03-09-2018) காலை 09.00 மணிக்கு இந்த அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில்...

மாங்குளம் அருகே மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா...

மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சடலங்கள் ஆடைகள் அற்ற நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 62ஆவது நாளாகவும் மன்னாரில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும்...

வீடமைப்பு – உட்கட்டுமான நடவடிக்கையை ஒருங்கே மேற்கொள்ளவும்! – நிதிக்குழு கூட்டத்தில் எடுத்துரைப்பு

வடக்கிலுள்ள 4500 ஏக்கர் காணிகள் மக்களிடம் எப்போது கையளிக்கப்படும் என்பதை உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுவதால், தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நிதிக்குழுவின் தலைவர் மு.சுமந்திரன்...

பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவும்: சுகிர்தன்

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்குப் பகுதியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளிற்குள் அரச கட்டடங்கள்...

பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

50 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளைக் காலை தொடக்கம் ஒரு இறாத்தல் பாணின் விலை 65 ரூபா என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “கோதுமை...
Loading posts...

All posts loaded

No more posts