Ad Widget

அபிவிருத்தியை கூட்டமைப்பினரே எதிர்த்தனர் – முதல்வர் விக்கி குற்றச்சாட்டு!

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், அனுப்பிவைத்திருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்ததாவது,

“அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர்.

அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தனர் என்றுத் தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், துரோகிகள் என்று அழைத்த எமது கட்சியினர் தான், உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் அந்தத் ‘துரோகி’களுடன் இப்போது கூட்டு வைத்துள்ளனர்.

பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருதியிருந்திருந்தால், அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியை மற்றவர்கள் பெறுவதை நாங்கள் தடைச் செய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts