“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை” – எம்.ஏ.சுமந்திரன்

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து கடந்த சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...

அரசியல் தீர்வை வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

அரசியல் தீர்வை எவ்வளவு வேகமாக பெற்றுத் கொடுக்க முடியுமோ எவ்வளவு வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் விடுத்துள்ள மின்னஞ்சலில் வடக்கு முதலமைச்சர் இதனை கூறியுள்ளார். உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய தனது வாசகம், சம்பந்தன் இந்த வருட முடிவுக்கு முன்னர்...
Ad Widget

கோதுமை விலை குறைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு கோதுமை மாவின் விலையை கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான...

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன் – சம்பந்தன்

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வடக்கு முதல்வர் மனதளவில் தயார் என்றால் மாற்று அணி தயாராகும்: சுரேஷ்

வடக்கு முதல்வர் தயாராக இருக்கின்றார் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாட முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வாராந்த நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இரண்டாவது...

ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகின்றார். இந்தவகையில் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு நாடளாவிய ரீதியில் பல சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசியலில் 1989 ஆம் ஆண்டு நுழைந்த மைத்திரிபால சிறிசேன, இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாண்டே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விலைபோய்விட்டனர்: கடற்றொழிலாளர் சமாச தலைவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். வட.மாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாராட்சி...

தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பின் தங்களது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தாங்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அரசியல் யாப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் ஆகக் கூடிய சில்லறை விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள்...

இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: ஐ.நா.ஆணையாளர்!

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு...

கட்சி அரசியலை விடுத்துச் செயற்படுவதே சிறந்தவழி – முதலமைச்சர்

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை...

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவரது ஒப்புதல் வாக்கு...

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்!

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து அன்னாரின் பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த யுவதியின் உடலிற்கு...

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி...

நாளை முதல் யாழ்-பருத்தித்துறை இடையே புதிய பஸ் சேவை!!

நாளை முதலாம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை 750 பாதையில் புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி தெரிவித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. பருத்தித்துறை- திக்கம்- தேவரையாளி-நெல்லியடி வீதியூடாக பஸ் பயணிக்கும். பருத்தித்துறையில் இருந்து காலை 6.35, 10.35, பிற்பகல் 3.10...

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆரப்பாட்டம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டன. கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை...

சிவில் உடை தரித்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது!

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒருமாத காலமாக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது ஓய்ந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நடைபெற்றது. இதன்போது வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு, வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில்...

யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை!!

வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் , தவிசாளரின்...

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பிணி எனவும்...
Loading posts...

All posts loaded

No more posts