Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விலைபோய்விட்டனர்: கடற்றொழிலாளர் சமாச தலைவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வட.மாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடித்தபோது அவர்களை கடற்படையினர் கைது செய்தார்கள். ஆனால் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அவர்களை காப்பாற்றியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்க முடியாத நிலையில் எதற்காக நாடாளுமன்றில் இருக்கவேண்டும்? இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் வட.மாகாணத்தில் உள்ள கரையோர மக்கள் ஒரு வருடத்திற்குள் பூரணமாக இறந்து விடுவார்கள்.

இப்போதே பல மீன் இனங்கள், கடல்வளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலுக்கு செல்வதற்கு பயன்படும் எரிபொருள் செலவுக்கு கூட மீனை பிடிக்க முடியாத நிலையில் எங்கள் மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளும் விலைபோய்விட்டார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts