Ad Widget

இ.போ.ச. பேருந்துச் சேவை­கள் வடக்­கி­லும் முடங்கும்!!

சம்­ப­ளப் பிரச்­சினை உள்­ப­டப் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து இ.போ.ச. ஊழி­யர்­கள் மேற்­கொண்­டு­வ­ரும் பணிப்­பு­றக்­க­ணிப்பு போராட்­டத்­துக்கு வடக்­குப் பேருந்து சங்­கங்­க­ளும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. அதை­ய­டுத்து வடக்­கில் இன்று இ.போ.ச. பேருந்­துச் சேவை­கள் முடங்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சம்­ப­ளப் பிரச்­சினை உள்­ப­டப் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து தெற்­கில் இ.போ.ச. ஊழி­யர்­கள் நேற்­று­முன்­தி­னம் பணிப்­பு­றக்­க­ணிப்பை ஆரம்­பித்­தி­ருந்­த­னர். எனி­னும் நேற்று வடக்கு இ.போ.ச. பேருந்­துக்­கள் சேவை­யில் ஈடு­பட்­டி­ருந்­தன.

இந்த நிலை­யில் தெற்­கில் நடத்­தப்­ப­டும் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து நேற்று நள்­ளி­ரவு முதல் பணிப் புறக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தால் வடக்கு மாகா­ணத்­தி­லும் இ.போ.ச பேருந்து சேவை­கள் இடம்­பெ­றாது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் 10 ஆயி­ரம் ரூபா மேல­திக கொடுப்­ப­னவை, அடிப்­படை வேத­னத்­தில் இணைத்­துக் கொள்­ளல் உள்­ளிட்ட கோரிக்­கை­கள் சில­வற்றை முன்­வைத்தே இந்த பணிப்­பு­றக்­க­ணிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Related Posts