Ad Widget

மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சுரேஸ் அதிருப்தி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை துண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளையே மகாவலி அதிகார சபை முன்னெடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நல்லாட்சியில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், மகாவலி அதிகார சபை தற்போது முல்லைத்தீவில் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே மனலாறு என்ற பகுதி தற்போது வெலி ஓயா என சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மகாவலி அபிவிருத்தி சபையினால் ஆறாயிரம் ஏக்கர் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ் மக்களின் காணிகள் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான காணி உறுதிப்பத்திரங்களும் சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Related Posts