- Monday
- May 5th, 2025
யாழ். பல்கலைக்கழகத்திற்கெனத் தெரிவு செய்யப்பட்ட கல்விசாரா ஊழியர்கள் 39 பேரின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வி அமைச்சு ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன. (more…)
"திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது. (more…)
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர்கள் மீது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தண்ணீர்ப் போத்தல்களால் தாக்க முற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து, இது...
யாழ்.மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்புரை நிகழ்த்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகிகோர் கூட்டத்துக்கு இணைத்தலைமை தாங்கினார்கள். (more…)
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பொதுநூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் வரலாற்றில் முதல் முறையாக சீன மொழியிலான அபிப்பிராயம் ஒன்று நேற்றுபதியப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் போது யாழ். பொது நூலகத்தினைப் பார்வையிட்டனர். (more…)

எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான ஐய்யாதுரை ஞானபிரகாசம் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வருடங்களாக கடமையாற்றும் இவர் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவர்.

சம்பள அதிகரிப்பு உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணிவரை இடம்பெறும் என அரச மருத்துவ சங்கத்தினர் யாழ். மாவட்டத்திற்கான தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார் (more…)

வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். (more…)

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடி வரும் தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது சட்டதிட்டங்களுக்கு அமைய ஏற்க மறுத்து வருகின்றது.மெல்பேர்னிலிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஒக்டோபர் 31ம் திகதி இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள் அகதிகளிடத்தில் கடைசி நேரத்தில் பல கேள்விகள் கேட்டு, சட்டதிட்டங்களுக்கு அமைவாக இல்லையெனின் திருப்பி அனுப்பி விடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்....
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தி பினான்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்குக் கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்வதற்காக தேசிய சேமிப்பு...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர். (more…)
போலியான கம்பனி ஒன்றுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் செய்துகொண்ட மீள் காப்புறுதி காரணமாக அதற்கு 208 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்திருக்கின்றார். கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அறிக்கையை அரசாங்க நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) நேற்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்தது. (more…)
யாழ்.வரணிப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)
யாழ்.குடாநாட்டில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ். பொலிஸார் இதுவரை 400 கைத்தொலைபேசிகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் நாவலர் வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்று இரண்டு தடவைகளும், நல்லூரடியிலுள்ள கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் மூன்று தடவைகளும் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. (more…)
யாழ். சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் புகுவதினால் சுத்தமான குடி நீரைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக கழிவு ஒயில் கிணறுகளில் புகுவது சம்பந்தமாக பிரதேச சபை, பிரதேச செயலகம், பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனை உட்பட பல இடங்களில்...
இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 - ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. (more…)

All posts loaded
No more posts