- Tuesday
- April 7th, 2026
மின்கம்பங்களை சேதமாக்கிய வாகன உரிமையாளர்கள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை வசூலித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)
வடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்.நகரப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தச் சம்பவம் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டது. (more…)
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. (more…)
வடமாகாணத்தின் கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சூறையாடி வருவதாகத் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாதுகாப்புத் தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடனே இந்த வளச் சுரண்டல் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். (more…)
உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)
மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை ஒன்றினை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவிடம் முன்வைத்துள்தாக போக்குவரத்து சபை முகாமையாளர் அஸ்ஹர் தெரிவித்தார். (more…)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். (more…)
50,821 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். (more…)
ஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிக்கும் முகமாக ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. (more…)
குடாநாட்டில் மழை வெள்ளம் தேங்காதவாறு தொண்டமானாறு, அராலி, அரியாலைப் பகுதிகளில் உள்ள கடல் நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மழை வெள்ளம் கடலுக்குள் செலுத்தப்படுகின்றது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிவன் சுதனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: (more…)
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழாராய்ச்சி உயிர்கொடை உத்தமர்கள் நினைவாலய நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
யாழ். கோண்டாவில் கிழக்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என யாழ்.மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மு.ரெமீடியாஸ் நேற்று தெரிவித்தார். (more…)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
