கருத்து வெளிப்பாட்டுக்கு வடக்கில் இடம் இல்லை; மாணவர், ஊடகர் மீதான தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. (more…)

சர்வாலய தீபத்திற்கும் யாழில் தடை; இராணுவம் கெடுபிடி

யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. (more…)
Ad Widget

தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. (more…)

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்,கைது,வாகனம் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சரவணபவன் எம்.பி.ஊடகங்களுக்கு விளக்கம்

அனுமதியின்றி பேரணி சென்றவர்களே கலைப்பு இராணுவம் ஒத்துழைத்தது: எரிக் பெரேரா

பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் தடியடி, இராணுவத்தினர் வயர் அடி!

பாடசாலைகளில் நன்கொடை கேட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம்

பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

யாழில் பிரிட்டிஷ் கவுன்ஸில்

இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் மூன்றாவது கிளை அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என அதன் பிராந்திய இணைப்பாளர் ஸ் ரீபன் ரோமன் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சிக்கிய சாராயப் போத்தல்கள்

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சாராயப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. வைத்தியசாலை ஆண்கள் விடுதியில் உள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்றவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தர் அதுகுறித்து வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டனர். (more…)

பொன்னாலை கிராம அலுவலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்கள் வசதிகளின்றி அந்தரிப்பு

23 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பொன்னாலை ஜே/170 கிராம சேவகர் பிரிவில் மின்சார விநியோக மார்க்கங்கள், கிராமிய வீதிகள், குடிதண்ணீர் விநியோகத் திட்டங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. (more…)

பட்டதாரி பயிலுநர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

சுட்டி விளக்குகள் விற்ற வர்த்தகர் மீது தாக்குதல்

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழகத்தில் படையினர் வெறியாட்டம்! – மாணவர்கள் மீது தாக்குதல்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் சுடரேற்றம்!.

சரவணபவன் எம்.பி மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதுதாக்குதல்!

யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி  தெரிவித்தார். (more…)

தைமாதம் 1ம் திகதி சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்! அடைக்கலநாதன் எம்.பி அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  (more…)

அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு-அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார். (more…)

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts