Ad Widget

கருத்து வெளிப்பாட்டுக்கு வடக்கில் இடம் இல்லை; மாணவர், ஊடகர் மீதான தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.

இராணுவத்தினரின் இவ்வாறான காட்டு மிராண்டிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் விடுத்த கண்டனக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

யாழ்.குடாநாட்டில் தற்போது இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு வெளி உலகுக்கு காட்டிவருகிறது. ஆனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் கருத்துவெளிப் பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நடைபெறும் சம்பவங்கள் ஊடாக உறுதிப் படுத்தமுடிகிறது.

யாழ். பல்கலைக்கழக மாண வர்களது விடுதியினுள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். குறிப்பாக இரவு வேளையில் இராணுவத்தினர் பெண்கள் விடுதியினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சட்டம் இங்கு யாழ். பல் கலைக்கழகத்தில் திணிக் கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம் ஒன்றினுள் இராணுவம் செல்வது இலங்கையில் மட்டுமே நிகழ்கிறது.

இந்தச் சம்பவங்களை நேற்றுமுன்தினம் செய்தியாக்கச் சென்ற உதயன் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் பல் கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவற்றை செய்தியாக்கச் சென்றிருந்த ஊடகவிய லாளர்கள் மீதும், ஊடக மாணவர்கள் மீதும் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் இங்கு நடக்கும்போது மனித உரி மைகளும், ஊடகசுதந்திர மும் வடக்கில் உண்டு என்று எதனடிப்படையில் கூறுவது?

கடந்த காலங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவைபற்றி அரசு இதுவரை எந்தவித விசாரணையோ, சட்ட நடவடிக்கையோ எடுத்திருக்கவில்லை. இத்தகைய அராஜகத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க எமது சங்கம் எப்போதும் ஆதரவு வழங்கும் என்றுள்ளது.

Related Posts