Ad Widget

யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

இதற்கமைய நாளை புதன்கிழமை மந்திகை, கிராமக்கோடு, தம்பசிட்டி, ஓராம் கட்டை, சாரையடி, புலோலி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் நாளை மறுதினம் வியாழக்;கிழமை கரவெட்டி கிழக்கு, கரவெட்டி மத்தி, நெல்லியடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, சாமியன் அரசடிப் பிரதேசம், சம்பந்தர்கடைப் பிரதேசம், துன்னாலை, குடவத்தை பிரதேசம், யாக்கருப் பிரதேசம், கிழவிதோட்டம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூர் முதல் ஆனைப்பந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்; மின்விநியோகம் தடைப்படும்.
இவ் அனைத்து இடங்களிலும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிரையும் இந்த மின்விநியோகம் தடைப்படும் என்று குறித்த பணிகள் நிறைவுபெற்றவுடன் மின்சார விநியோகம் வழமைக்குத்திரும்பும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள மின்விநியோக மார்க்கங்களுக்கு இடையூறாகவுள்ள மரங்கள், மரக்கொப்புக்கள், தென்னை ஓலைகள், பனை ஓலைகள் என்பவற்றை வெட்டியகற்றி தடையற்ற மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள மின்சார சபைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

Related Posts