Ad Widget

யாழ். நூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் சீனமொழி

யாழ். பொதுநூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் வரலாற்றில் முதல் முறையாக சீன மொழியிலான அபிப்பிராயம் ஒன்று நேற்றுபதியப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் போது யாழ். பொது நூலகத்தினைப் பார்வையிட்டனர்.

அதன் போதே சீன தூதுவர் விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் தனது அபிப்பிராயங்களை அவருடைய தாய் மொழியான சீன மொழியில் பதிவு செய்தார்.

இதுவரை காலமும் யாழ். பொது நூலகத்தில் சீன மொழியினால் ஒரு எழுத்துக் கூட பதியவில்லை முதன்முறையாக பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளதாக பிரதம நூலகர் திருமதி இமெல்டா கருணாகரன் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தினால் யாழ். பொதுநூலகத்திற்கு 10 இலட்சம் ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலகத்தைப் பார்வையிட்ட குழுவினர் நூலகத்தின் பிரமத நூலகரிடம் இந் நிதியினைக் கையளித்தனர்.

எனினும் உசாத்துணைப் பகுதியினை புதுப்பிப்பதற்கு 2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஏற்கனவே சீன அரசாங்கத்திடம் நூலகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றைய தினம் விஜயத்தினை மேற்கொண்ட சீன அதிகாரிகள் குழு பிரதம நூலகரிடம் இந் நிதியினை வழங்கியியுள்ளனர்.

சீன அரசாங்கத்தினால் யாழ். பொது நூலகத்திற்கு கிடைக்கும் முதலாவது உதவி என்பது குறிப்பிடத்தக்கது.

நூலகத்தின் அனைத்துப்பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பழைய சஞ்சிகையான உதயதாரகையினையும் பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தில் சீன தூதுவர் wu. Janghoa, mrs. wu ms Ding yue, செயலாளர் Gong hui, சீன நாட்டு பொருளாதார அமைச்சின் ஆலோசகர் Wang yinqi, பொருளாதார திணைக்களத்தின் அதிகாரி Zhang yuanyuan , யாழ். மாநாகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் நூலகத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Posts