Ad Widget

த.தே.கூ. எம்.பி.க்களை தண்ணீர் போத்தலால் தாக்க முயற்சித்த சந்திரகுமார் எம்.பி

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர்கள் மீது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தண்ணீர்ப் போத்தல்களால் தாக்க முற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து, இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது முருகேசு சந்திரகுமார் எம்.பி குறுக்கிட முற்பட்டதை அடுத்து ‘நான் உம்மோடு கதைக்கவில்லை நீர் அமைதியாய் இரும்’ என்று ஸ்ரீதரன் எம்.பி குறிப்பிட்டார்.

இதனால் கோபமடைந்த சந்திரகுமார் எம்.பி, அவருக்கு முன்னால் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசுவதற்கு முற்பட்டார்.

பதிலுக்கு அங்கிருந்த த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்று கூறினர். இதற்கிடையில் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பெரும் ஆரவாரங்களை மேற்கொண்டனர்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு தரப்பினரும் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Related Posts