மஹிந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய ரணில் தலைமையில் விசேட குழு!

நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்),...

அரசியல் சார் மூதவை உறுப்பினர்களை மாற்றுமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை

தற்போதுள்ள எமது பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றி அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை இந்த அவையிலே நியமிக்க வேண்டும். - இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த காலங்களில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அரசியல் தலையீடுகளினாலும், தனிநபர் செல்வாக்குகளினாலும் தகுதியற்ற உறுப்பினர்களை நியமித்தமையை...
Ad Widget

நகுலேஸ்வரன் கொலை வழக்கு: 4 பேர் விடுதலை! கிராம அலுவலர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில்...

கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது! – மைத்திரி, ரணில் தெரிவிப்பு

"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

ரூ.20 மில்லியன் செலவில் சந்தை, உடற்பயிற்சிக்கூடம்

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்பன மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேலணை பொதுச்சந்தை மற்றும் வடக்கின்...

டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில்...

கிரிக்கெட் வீரர்களின் சுவாரசிய மூட நம்பிக்கைகள்!

கிரிக்கெட்டையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சச்சின் அடித்து ஆடும்போது இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலபேர் வகுத்துக் கொண்ட எழுதப்பட்டாத நம்பிக்கை. எழுந்தால் எங்கே விக்கெட் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம். கும்ப்ளே-சச்சின் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளே...

ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது கமலின் உத்தம வில்லன்?

கமல்ஹாஸனின் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு கமல் ஹாஸன் நடிக்க ஆரம்பித்த படம் உத்தம வில்லன். படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சொன்ன தேதியில் வெளியிடவில்லை. அக்டோபர், டிசம்பர் என வேறு மாதங்களில் வெளியிடப் போவதாகச் சொன்னவர்கள், கடைசியாக பிப்ரவரி...

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?

தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த கதாநாயகியும் இப்படி ஒரு வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாரா தன்னை தேடி வந்த ஜாக்பாட் ஒன்றை திருப்பி அனுப்பியுள்ளார். இயக்குனர் அட்லீ இளைய தளபதியுடன் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தான் கமிட் செய்தாராம். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை...

180 நாட்கள் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நிரந்தரப்படுத்துவதில் வடக்கு அதிகாரிகள் அசமந்தம்!

தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல்  தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf)  சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த...

விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் “விண்டோஸ் 10” இலவசம்!!

மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம்...

இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர நியமிப்பு

புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் 28ஆம் திகதி வரை மட்டுமே!

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...

மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க ஊடகங்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் – டக்ளஸ்

நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் ..... ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை...

மின்சார கட்டணத்திலும் மாற்றம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.

 தனியார் பஸ் கட்டணங்கள் குறைப்பு

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 7 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிரகாரம் ஆரம்பக்கட்டணம் 8ரூபாவாகும்

நோர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு

சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், தெரிவித்தார். அமைச்சருடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பில் அமைச்சர் இந்த...

கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யலாம்

எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கம் - 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் -...

இ.போ.ச – தனியார் பஸ் ஊழியர்கள் கைகலப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...

அரசியல்வாதிகள், கொலையின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் பிடியில்!

"ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது" இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: "அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன்,...
Loading posts...

All posts loaded

No more posts