Ad Widget

180 நாட்கள் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நிரந்தரப்படுத்துவதில் வடக்கு அதிகாரிகள் அசமந்தம்!

தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல்  தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf)  சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த வில்லையென்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய மாகாணங்களிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் இருந்து மிகக்கூடிய அளவில் குறித்த உத்தியோத்தர்களின் சுய விபரங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் யாழ் மாவட்டம் உள்ளிட்ட ஏனைய வடமாகாண மாவட்டங்களில் இருந்து வெறுமனே 50 இற்குட்பட்டவர்களின் பெயர் விபரங்கள் மட்டும் இதுவரை பட்டியலாக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இது நியமனங்களை மேற்கொள்வதற்கு போதுமான தகவல்கள் இல்லை என தெரியப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் உரிய ஆவணங்கள் இன்னும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசு பதவியேற்று புதிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பிற்பாடு ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தலின் பிரகாரம் இதற்கான பணிகள் முன்னெடுக்கபடுவதாகவும் வருகின்ற திங்கட்கிழமைக்கு (26) முன்பாக வருகின்ற ஆவணங்களின் அடிப்படையில் தான் நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் அசமந்தமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளதாக உள்நாட்டல்வல்கள் அமைச்சில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Related Posts