- Monday
- May 11th, 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து...
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...
குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு...
தமிழில் மட்டும் கலக்காமல் பாலிவுட்டிலும் தன் திறமையை காட்டி வரும் தனுஷ் விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார். தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு வெற்றி படங்களில் கொடுத்தா தனுஷ் பாலிவுட்டிலும் வெற்றி படலத்தை தன் தயாரிப்பு நிறுவனம் முலம் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து படங்களை தயாரிக்க போகிறாராம். மிக விரைவில்...
எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்...
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகளை சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டு இழந்தார். இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை 2011ஆம் ஆண்டு...
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம் இராஜாங்க அமைச்சர் சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி பிரதியமைச்சர்கள் சமூக சேவைகள், நலன்புரி...
சனாதிபதித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி பாலவை ஆதரிப்பதாக முடிவை அறிவித்ததன் பின்னர் அதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரான சிவகரனினால் கட்சி உறுப்பினர் மறவன்புலோ சந்திதானந்தனுடன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கட்சியில்...
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் ராவிட் விமர்சித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் ராவிட் கூறியதாவது: "எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே...
பெரும்பான்மை பலம் சுதந்திர கூட்டமைப்பிற்கு உண்டு என்பதனை ஐ.தே.க புரிந்து செயற்பட வேண்டும்: ரதன தேரர்
நாடாளுமன்றின் பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உண்டு என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணகைளை தடுத்து நிறுத்த...
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்ட வரைவுத் திட்டம் எதிர்வரும் 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட வரைவு இன்னமும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து 19ம் திருத்தச் சட்டத்தை...
மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களிலுள்ள அனைத்து வரியற்ற வர்த்தக நிலையங்களினதும் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார். அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 'முன்னைய காலங்களில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை பழைய முறைப்படி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனை கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பழைய முறைப்படி இரண்டு வினாத்தாள்கள் கொண்டதாக பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசில் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின்...
பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது எனினும் நேற்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் காணி சுவீகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவுபடுத்தியதையடுத்து...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பி.நந்தகுமார் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தெல்லிப்பளை வைத்தியசாலையிலுள்ள கிணற்றில் எண்ணெய் படலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்று பரிசோதனை செய்தபோது எண்ணெய் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள்...
தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை ஒரு தரப்பு மட்டும் அனுபவிக்காமல் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார். ஆனைக்கோட்டை கூழாவியடி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம்...
அரசியல் தலையீடு காரணமாகவும் ,சுயஇலாப நோக்கத்திற்காகவும் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள் என வடமாகாண வேலையற்ற பட்டாதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான முறையில் இடம்பெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்ப்பது...
பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியினை இராணுவத்துக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
