Ad Widget

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பி.நந்தகுமார் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘தெல்லிப்பளை வைத்தியசாலையிலுள்ள கிணற்றில் எண்ணெய் படலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்று பரிசோதனை செய்தபோது எண்ணெய் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, வைத்தியசாலைக்கான நீர் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிணற்றில் மாசுபடலம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், உறுதிப்படுத்தும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts