இளம் குடும்பஸ்தா் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை(20) இரவு 11 மணியளவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி எஸ்.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்தார்....

இளையராஜாவுக்கு அமிதாப், ரஜினி, கமல் மரியாதை!

உலக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். 1976-ல் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா,...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்களை காணவில்லை

தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் நேற்று தெரிவித்தனர். யாழ். குருநகர் கடற்கரை வீதிப்பகுதியைச் சேர்ந்த அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அதே இடத்தினைச் சேர்ந்த அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 4.30...

வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலுக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு!

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ள ஒன்றுகூடலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. அரச நியமனங்களின்போது அரசியல் தலையீடுகளோ, தனிநபர் செல்வாக்குகளோ இருக்கக்கூடாது என்றும், தகுதி அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் இன்றி நடத்தப்படும்...

காலியில் நிற்கும் கப்பலில் 3000 மேற்பட்ட துப்பாக்கிகள்!

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கும் மகநுவர என்ற கப்பலில் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர். தமது மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இதன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனப் பாதுகாப்பு...

தமிழரின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுவேண்டும்!சம்பந்தன் வலியுறுத்து!!

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையானது அவசர விடயமாகக் கருதப்பட்டு தீர்க்கப்படவேண்டும் என்று புதிய அரசிடம் நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு வழங்கப்படும் தீர்வானது நியாயமானதாகவும், பயனுடையதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்றும், பிளவுபடாத இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளேயே தாம் இதனை...

முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு

முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் நிறுத்தி வைக்கப்பட்ட முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற வட மாகாண சமூக சேவை திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சமூக சேவைகள்...

வடபகுதி உற்பத்தியாளர்கள் – ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு

வடமாகாண உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் சனிக்கிழமை, 24ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.வர்த்தக கைத்தொழில் மன்றத்தலைவர் கே.விக்னேஸ் செவ்வாய்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த சந்திப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர். எந்தப் பகுதியில், எந்த வகையான உற்பத்திகளை மேற்கொள்ள...

மைத்திரிபால சிறிசேன எம்பி பதவியில் இருந்து இராஜினாமா

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...

 பீ.எம்.ஐ.சி.எச்.இல் களஞ்சியப்பட்டிருந்த ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள 'ரக்ன லங்கா' எனப்படும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி காணப்படுவதால், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். மேற்படி களஞ்சியசாலையிலுள்ள 23 கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது...

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். காரைநகர் சுற்றுலாத்துறை பயிற்சி அதிகாரசபை மையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியலுக்கு வர முன்னமே வடகிழக்கு மாகாணங்களில்...

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் – மகிந்த

அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1931 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் எங்களுடைய வீட்டில் முதல் தடவையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது....

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்....

உலக மட்டத்தில் அதிகரிக்கும் தடுப்பு மருந்துகளின் விலை

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளை செய்யுமாறு சர்வதேச மருத்துவ குழுவான எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு கேட்டுள்ளது. பல பொதுவான சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலை 2001இல் இருந்ததை விட 68 மடங்கு அதிகமாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. அவற்றின் விலைகளில்...

மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல்: ரனில் விக்ரமசிங்க உறுதி

இலங்கையின் புதிய பிரதமர், ரனில் விக்ரமசிங்க, அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார். சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விரிசல் சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப்போராக வழிவகுத்ததற்கு ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வாக அவர் தமிழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலை விஸ்தரிக்கப்...

ஐ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த விக்ரம்?

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை...

ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் விஜய்

தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய் செல்லமாக இளவரசி என்று அழைத்து வருகிறாராம். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, எனக்கு மிகவும் பிடித்த...

இனவாதத்தை மறந்து பிரச்சினை தீர்க்க பிரதமர் அழைப்பு: 26ல் பட்ஜெட்!

இனவாதத்தை கைவிட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இன்று (20) இடம்பெற்ற வேளை விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். எதிர்வரும் 26ம் திகதி...

மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு சிறப்புரிமை அட்டை அறிமுகம்!

யாழ். மாநகர சபையினால் குறித்த காலப்பகுதியினுள் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்காக சிறப்புரிமை அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்அட்டையானது கடந்த 3 வருடங்களில் ஜனவரி மாதத்திற்குள் மதிப்பீட்டு வரிகளைச் செலுத்தி நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் வாழும் பிரஜைகளுக்கு உரித்தானது. அதாவது குறித்த வருடத்திற்குரிய சோலைவரி கொடுப்பனவினை அந்த வருடம் ஜனவரி மாதம்...

வட மாகண பிரதம செயலாளராக பத்திநாதன் நியமனம்

வடமாகாகண சபையின் பிரதம செயலாளராக முல்லைத்தவு மற்றும் மொனாறாகலை ஆகிய மாவட்டங்களில் முன்னர் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அ.பத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக முன்னர் கடமையாற்றி வந்த திருமதி.விஜயலட்சுமி றமேஸ் இச்சபையின் நிர்வாகச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவருவதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வந்த நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால்...
Loading posts...

All posts loaded

No more posts