Ad Widget

பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்சேகா  மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகளை சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டு இழந்தார். இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை 2011ஆம் ஆண்டு உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வழி செய்த 2009ஆம் ஆண்டு மே மாத இறுதிக்கட்ட யுத்தத்தில் சரத் பொன்சேகா, இராணுவத்துக்கு தலைமை தாங்கியிருந்தார். யுத்தம் முடிவடைந்தவுடன் தனது இராணுவ பதவியை இராஜினாமா செய்து, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தத் தோல்வியை அடுத்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

Related Posts