மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத பிரதம செயலாளர்

வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனுடைய வாகனத்தில் 'பிரதம செயலாளர்' என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கவேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழ்வதால் வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் பலகைகள் மற்றும் வாகனங்களின் பெயர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்...

ஆலயங்களை காணவில்லை

வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை...
Ad Widget

இந்தியாவின் அழகான நடிகர் ‘தல’ அஜித்

இந்திய நடிகர்களில் மிகவும் அழகான நடிகர் யார் என்ற இணையதள வாக்கெடுப்பில், அக்‌ஷய் குமார், அமீர்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ’தல’ அஜித் முதலிடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் லைஃப் என்ற இணையதளம் இந்தியாவில் கவர்ச்சியான நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்‌ஷய்குமார், மிலந்த் சோமன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி...

யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நகரில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றன. இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய -...

யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகிறார் இந்தியப் பிரதமர்!

இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்பார். பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார். இதன் பின்னர் சுமார் 90 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்திய கலாசரா மையத்துக்கு...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இந்த அறிவித்தலை நேற்று வெள்ளிக்கிழமை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தது. இவர்கள் மூவரும் இடமாற்றம் பெற்ற மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை தங்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடமாற்றத்தின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

மோடி-மஹிந்த இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் -

முருகேசு பகீரதி விடுதலை: வெளிநாடு செல்லத் தடை!

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி தனது எட்டு வயது மகளுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆனால் அவரை பிணையில்...

பொறுமையாக இருக்கவும் – கூட்டமைப்புக்கு மோடி ஆலோசனை!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு...

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும் ரூபாவின் பெறுமதியை பலப்படுத்தவும் உதவி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில்...

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.

விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல்

பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று வியாழக்கிழமை (12), நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார்...

 இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம். 2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும்...

வீடு திரும்பினார் கடத்தப்பட்ட முன்னாள் பெண் போராளி!

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார். சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை...

ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தைடைந்த இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இனறு காலை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறப்படுகிறது. இதேவேளை இன்று...

ஜெயக்குமாரி விடுதலை அமெரிக்கா வரவேற்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித...

இலங்கை, இந்திய மீனவர்களில் 102 பேருக்கு விடுதலை

இருநாட்டு கடல் எல்லைகளையும் மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் 102 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த...
Loading posts...

All posts loaded

No more posts