Ad Widget

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும் ரூபாவின் பெறுமதியை பலப்படுத்தவும் உதவி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi-2

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்பில் உரையாற்றுகையில்,

இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு வாழ்வாதார மற்றும் மனிதாபிமானம் என்ற இரண்டு பரிமானங்கள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கொஞ்ச காலம் எடுக்கும்.

எமது வர்த்தகம் கடந்த தசாப்தத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. உங்கள் கவலைகளும் எனக்கு விளங்குகின்றது. நாம் அவற்றை தீர்த்து வைப்பதற்கு முயல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை ரூபாவின் பெறுமதியை பலப்படுத்துவதற்காக 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து உதவுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts