- Wednesday
- May 13th, 2026
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று...
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார். முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். புதிய படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி இதை முடிவு செய்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தை...
வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் 30 வீத சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மரணம் அடைந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு இலட்சம் உதவுதொகையாக வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாணத்தில் உள்ள பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் அமைச்சர்...
வரணி இடைக்குறிஞ்சி பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை(14) இரவு முகத்தை துணியால் மறைத்தபடி நுழைந்த நால்வர் கொண்ட குழு, வீட்டிலிருந்தவர்களை அடித்து, கட்டிவைத்ததுடன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கொடிகமம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தனர். வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இவ்வாறு...
கிளிநொச்சி, பளை தர்மகேணி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை கடக்கமுயன்ற அதேயிடத்தை சேர்ந்த குருபரன் தவசீலன் (வயது 32) என்பவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியதில், இவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்...
'தமிழர் ஒற்றுமை' (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில்...
வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4...
வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே யாழ். பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் மேற்கொண்டு யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, இந்திய நிதியுதவியில் முற்றவெளியில் கலாச்சார மண்டபம் கட்டுவதற்கான திரைநீக்கமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக அறியமுடிகிறது. பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என...
இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய பிரதமர் கீரிமலை கூவில் பகுதியில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை...
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்துள்ளோம். யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் எமது கல்வி முன்னேற்றம் கண்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே...
எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இல்லை. எம்மை எமது சொந்த காணிக்கு செல்ல அனுமதித்தாலே போதும். நாம் எமது காணியில் கொட்டில்களையோ குடிசைகளையோ அமைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வோம் பலாலியை சொந்த இடமாக கொண்ட எஸ்.சரவணமுத்து என்பர் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (14) பிற்பகல் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு தலைமன்னார்- மடுவுக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார். கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தெமட்டகொடை பிரதேசத்திலுள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து மனித உடற்பாகங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை இரண்டு கால்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனுராதபுரத்திற்கு சென்றார். காலை அங்கு விஜயம் செய்த அவர், ஸ்ரீமாஹா போதி, றுவன்வெலிசாய ஆகிய பகுதிகளுக்கு சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அமைச்சர்களும் உடனிருந்தனர். அத்துடன் தற்பொழுது இந்தியப் பிரதமர் மோடி...
ஆறுமாத காலப்பகுதிக்கு முன்னர் சேதமின்றி இருந்த வீட்டை தற்போது இடித்து அழித்து மண்மேடாக்கி விட்டனர் என வீட்டின் உரிமையாளரான அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா கண்ணீருடன் தெரிவித்தார். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர். தனது...
வடமாகாண மக்களுடையே ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிரேஸ்ட வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா, வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில்...
Loading posts...
All posts loaded
No more posts
