Ad Widget

இந்தியாவின் அழகான நடிகர் ‘தல’ அஜித்

இந்திய நடிகர்களில் மிகவும் அழகான நடிகர் யார் என்ற இணையதள வாக்கெடுப்பில், அக்‌ஷய் குமார், அமீர்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ’தல’ அஜித் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ajith

பாலிவுட் லைஃப் என்ற இணையதளம் இந்தியாவில் கவர்ச்சியான நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்‌ஷய்குமார், மிலந்த் சோமன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த போட்டி ’பட்டியலில்’ தமிழத்தின் ’தல’ என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார். ஓட்டெடுப்பில், அஜித் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இணையதள வாக்காளர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர். அடுத்து அக்‌ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத வாக்குகளும், அமீர் கானுக்கு 1.92 வாக்குகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 வாக்குகளும் கிடைத்து உள்ளது.

முதன் முதலில் அஜித் மங்காத்தா திரைப்படத்தில் ’சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலில் முதன் முதலாக தோன்றினார். பின்னர் தொடர்ந்து ஆரம்பம், வீரம், சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அதே ஸ்டைலில் தோன்றினார்.

இதேபோல் ’பிரதர்ஸ்’ படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் சால்ட் பெப்பர் ஸ்டைலில் தோன்றினார். அமீர்கான் தனது அடுத்தப் படமான ’டாங்கள்’ படத்தில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts