இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தர்மன்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் ராம் பொதினேனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ராஷி கன்னா பேட்டி ஒன்றில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதில்,
“தர்மன் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்திடம் நிறைய பேசுகிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரை போல் மாறிவிட்டார். அடிக்கடி அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்வேன். இருப்பினும், என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக பதிலளிப்பார்.
அவர் அருகில் இருக்கும்போது நான் ஒரு குழந்தையை போல் உணர்கிறேன். தர்மன் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன். ஒரு சாதாரண ரசிகையை போல் நானும் தர்மன் படத்தை திரையில் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.