- Tuesday
- May 13th, 2025

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம், என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை...

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில்...

தங்களின் விமானப் படை விமானியை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் உயிருடன் பிடித்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் எவ்விதமான சான்றும் தமக்குக் கிடைக்கவில்லை என்று ஜோர்தான் கூறியுள்ளது. [caption id="attachment_39526" align="aligncenter" width="660"] படம்: இடமிருந்து வலமாக- மாஸ் அல்- கஸ்ஸாஸ்பி ( ஜோர்தானிய விமானி), சஜீதா அல்- ரிஸாவி (ஜோர்தான் சிறையில் உள்ளவர்), கென்ஜி கோட்டோ (...

அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்த அகதித்தஞ்சக் கோரிகளை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. சிறு குழந்தைகள் உட்பட...

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா...

வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப்...

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி மன்னர் அப்துல்லா காலமானார். புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய மன்னராகும் சல்மான் தனது வாரிசாகவும் பட்டத்து இளவரசராகவும் அவரது உறவினர் முக்ரினை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியாவின் மன்னராக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட...

விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும்,...

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளை செய்யுமாறு சர்வதேச மருத்துவ குழுவான எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு கேட்டுள்ளது. பல பொதுவான சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலை 2001இல் இருந்ததை விட 68 மடங்கு அதிகமாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. அவற்றின் விலைகளில்...

பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில், தாங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளைக் கண்டித்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு கூடாரங்களுக்குள் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மனுஸ் தீவு தடுப்புமுகாமில் நடக்கும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை சிறுவனை விட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ காண்போர் நெஞ்சை கலங்கடிப்பதாக உள்ளது. அந்த வீடியோவில் இரு நபர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின்...

பாரிசிஸ் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிசில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு முதல் முறையாகக் கூடிய அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 17 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரெஞ்சு தேசிய...

'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...

அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இணைய காலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும், ராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய...

கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில்...

நியூஸிலாந்தின் தென் தீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த...

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 7 வயதுச் சிறுமி அதிசயிக்கத் தக்க வகையில் உயிர் தப்பியுள்ளாள். விமானம் விழுந்த இடத்தில் இருந்து அருகிலுள்ள வீடொன்றுக்கு நடந்து சென்ற அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் சிதிலங்கள் காட்டுப் பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. விமானியும்...

நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த...

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது. அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில்...

கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது....

All posts loaded
No more posts