Ad Widget

ஜோர்தானிய விமானி இஸ்லாமிய அரசின் பிடியில் இருப்பதாக ஆதாரம் இல்லை

தங்களின் விமானப் படை விமானியை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் உயிருடன் பிடித்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் எவ்விதமான சான்றும் தமக்குக் கிடைக்கவில்லை என்று ஜோர்தான் கூறியுள்ளது.

படம்: இடமிருந்து வலமாக- மாஸ் அல்- கஸ்ஸாஸ்பி ( ஜோர்தானிய விமானி), சஜீதா அல்- ரிஸாவி (ஜோர்தான் சிறையில் உள்ளவர்), கென்ஜி கோட்டோ ( ஜப்பானிய பணயக் கைதி)
படம்: இடமிருந்து வலமாக- மாஸ் அல்- கஸ்ஸாஸ்பி ( ஜோர்தானிய விமானி), சஜீதா அல்- ரிஸாவி (ஜோர்தான் சிறையில் உள்ளவர்), கென்ஜி கோட்டோ ( ஜப்பானிய பணயக் கைதி)

அப்படியொரு ஆதாரம் இல்லாமல் இஸ்லாமிய அரசு கோருகின்ற தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் ஜோர்தானிய அரசின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு இது தொடர்பில் இரண்டு குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள ஜப்பானிய பணயக் கைதி கென்ஜி கோட்டோ பேசுவதுபோல அந்த குரல் பதிவு உள்ளது.

இராக்கில் தற்கொலைத் தாக்குதல் நடத்த முற்பட்டு, ஜோர்தானால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பெண் இன்றைக்குள் விடுவிக்கப்படாவிட்டால் ஜிகாதிக்கள் விமானியைக் கொன்றுவிடுவார்கள் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பணயக் கைதியாக இஸ்லாமிய அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இருவரின் தலைவிதி தமது கையில் உள்ளது என்பதை ஜோர்தான் மற்றும் ஜப்பானிய அரசுகள் உணரவேண்டும் என்று கோட்டோவின் மனைவி கூறியுள்ளார்.

Related Posts