Ad Widget

அமெரிக்காவில் விழுந்த விமானம்; 4 பேர் பலி, உயிர்தப்பிய சிறுமி

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 7 வயதுச் சிறுமி அதிசயிக்கத் தக்க வகையில் உயிர் தப்பியுள்ளாள்.

விமானம் விழுந்த இடத்தில் இருந்து அருகிலுள்ள வீடொன்றுக்கு நடந்து சென்ற அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார்.

விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் சிதிலங்கள் காட்டுப் பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானியும் பயணிகள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
குறித்த சிறுமி இப்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றாள்.

விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை முன்னதாக விமானி தங்களுக்கு அறிவித்திருந்ததை, மைப்பர் பீ.ஏ-34 என்ற இந்த விமானத்துடனான தொடர்பினை பின்னர் இழந்திருந்த விமான போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Related Posts