- Friday
- February 6th, 2026
நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த...
ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது. அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில்...
கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது....
சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் சென் யி சதுக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். புத்தாண்டு பிறக்க அரை மணி நேரம் இருந்தபோது, திடீரென கூட்ட நெரிசல்...
தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு...
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில்...
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏயார் ஏசியா (Air Asia) விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசார்னஸ்...
இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் பறந்த வழியில் காணாமல்போயுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை வான் வழியாக தேடும் பணிகளை, இரவு சூழ்ந்துவிட்டதால் இந்தோனேஷியா இடைநிறுத்தியுள்ளது. போர்னியோவுக்கு தென்மேற்காகவுள்ள கடற்பரப்பில் விமானம் தொடர்பை இழந்திருந்த இடத்தில், இந்தோனேஷியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கிளம்பிய இராணுவ விமானங்கள் தேடிவந்தன. மோசமான வானிலை நீடித்தாலும் வெளிச்சம் குறைவாக இருந்தாலும்...
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல்போயுள்ளது. இந்தோனேசியாவின் சுரயபோ நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பயணிகளுடன் சென்ற எயர்ஏசியா விமானசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமே காணாமல் போயுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் அதிகாலையுடன் QZ 8501 விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த...
இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில்...
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது. அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள்...
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவல் வௌியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற...
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை...
பாகிஸ்தானின் பெஷாவரில் நடைபெற்ற மோசமான தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்கெனவே வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் கடந்த 2011ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் ஒஸ்மான் மற்றும் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை...
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாண்டில் உள்ள கெய்ன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதுப் பெண்மணி ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு, எப்படி இந்தச் சம்பவம் நடந்த்து என்ற விவரங்கள் இதுவரை தெளிவாகவில்லை....
அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை...
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும்...
பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 4 பேர் பலியானதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெஷாவரில் உள்ள இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக...
இந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும். விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து...
Loading posts...
All posts loaded
No more posts
