Ad Widget

குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் தேவை – ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியாவின் சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார்.

Tony-Abbott-satire

சிட்னியில் கடந்த டிசம்பரில் ஆயுததாரி ஒருவர் பணயம் வைத்திருந்த இருவரை கொன்ற சம்பவத்தின் பின்னணியிலேயே பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.

இரானிலிருந்து வந்து குடியேறியிருந்த- குறித்த இஸ்லாமியவாத ஆயுததாரி ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த ஓர் அரக்கன் என்று பிரதமர் அப்போட் வர்ணித்துள்ளார்.

அந்த நபர் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும், அவரை பிணையில் வெளியில் செல்லவிட்டிருக்கக் கூடாது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிட்னி முற்றுகை சம்பவம் தொடர்பான அரசாங்கத்தின் முதலாவது அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில், எந்தவொரு அரச நிறுவனமும் தவறு இழைத்திருப்பதாக கண்டறியப்படவில்லை.

எனினும், நாட்டின் ஒட்டுமொத்த சட்ட கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தவறே இதுவென்றும் அப்போட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய சம்பவத்தின்போது, ஆயுததாரி ஹாரோன் மோனிஸை சுட்டுக்கொன்று முற்றுகையை காவல்துறையினர் முடிவுக்குக் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts